'முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கர்மவீரர் காமராஜர்' - சட்டமன்றத்தில் புகழ்பாடிய பா.ம.க. எம்.எல்.ஏ
தமிழக சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ., சதாசிவம் பேசினார் அப்போது, மேட்டூர் தொகுதிகுட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்கம் வேண்டும் என்றார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் கர்மவீரர் காமராஜர் போன்று நினைக்கிறேன். நான் புகழ்ந்து பேசுவதாக எண்ண வேண்டாம். காரியம் நடைபெறுவதற்காக கலகலப்பாக பேசியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் மேட்டூர் தோனிமடுவு நீர்தேக்கம் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதனை முதலமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயனடையும். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu