பிரதமர் மோடி நம் சொந்தம்.. தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் பேச்சு.!

பிரதமர் மோடி நம் சொந்தம்.. தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் பேச்சு.!

Update: 2021-02-25 17:34 GMT

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

அப்போது மேடையில் பாஜக தலைவர் முருகன் பேசியதாவது: தமிழகத்திற்கு இதுவரை 5 லட்சம் கோடிக்கு அதிகமான நலத்திட்டங்களை பிரதமர் மோடி அளித்துள்ளார். தமிழை உயிராக நேசித்து வருபவர். திருவள்ளூவர், புறநானூறு போன்றவற்றின் மாணவனாக பிரதமர் திகழ்ந்து வருகிறார்.

மேலும், பிரதமர் மோடி நம் சொந்தம், நம் உயிர், கங்கையில் பிறந்து, காசியில் வளர்ந்து, தாமிரபரணி, மற்றும் காவிரியில் வந்து சேர்ந்துள்ளார். அவரை நாம் வரவேற்பதில் மிகவும் பெருமிதம் அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News