தமிழக நிதியமைச்சர் பெயரில் ஏழு போலி மின்னஞ்சல் முகவரிகள்.
தெரியாத நபர்களை கண்டறிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் ஏழு போலி மின்னஞ்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அதன்மூலம் சமுதாய சிக்கலை உருவாக்கும் போலி மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "நிதியமைச்சர் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 153 (ஏ) மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், 295 (ஏ) ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், 465 பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், 467 - மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில் போன்றவற்றை போலி ஆவணங்கள் தயாரித்தல், 500 - அவதூறு பரப்புதல், 34 - உட்கருத்துடன் செய்யப்படும் செயல்கள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.