"எங்க அப்பா! எங்க தாத்தா!! எங்க கொள்ளு தாத்தா!!!" - மீண்டும் மீண்டும் பரம்பரை புகழ்பாடும் பி.டி.ஆர் !

Update: 2021-10-12 13:15 GMT

"எனது அப்பா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தவர், எனது தாத்தா நீதிக்கட்சியில் தலைவராக இருந்து மெட்ராஸ் மாகாணத்தில் முதல் அமைச்சராக இருந்தவர், எனது கொள்ளு தாத்தா நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் துணை தலைவராக இருந்தவர்" என குடும்ப பெருமைகளை மீண்டும் பொதுவெளியில் பேசியுள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

தி.மு.க'வில் சர்ச்சைகளுக்கு குறைவில்லை ஆனால் அதில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தும் நிதியமைச்சர் பி.டி.ஆர் அவ்வபோது கூறும் வார்த்தைகளில் முக்கியமானது, "எனது தாத்தா, எனது அப்பா" என பரம்பரை பெருமை. மக்களே இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் அளவிற்கு அத்தனை முறை இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் தனது பரம்பரை பெருமையை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் உள்ள பெங்களூர் கிராப்ட் எனப்படும் வாழை பட்டையில் இருந்து கூடைகள் தயாரிக்கும் தொழில் மையத்தை பார்வையிட்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கு நடைபெற்ற விழாவில் பேசினார்.

அப்போது அவர், "எனது அப்பா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தவர். எனது தாத்தா நீதிக்கட்சியில் தலைவராக இருந்து மெட்ராஸ் மாகாணத்தில் முதல் அமைச்சராக இருந்தவர். எனது கொள்ளு தாத்தா நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் துணை தலைவராக இருந்தவர் அதன் அடிப்படை கொள்கை பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதுதான். வரலாற்றில் இதற்கு சான்றுகள் உள்ளன" என பேசினார்.

மேலும், "ஆட்சி சக்கரத்தின் முதல் தடமே பெண்கள் முன்னேற்றம் ஆகும் . திறனாய்வை பொறுத்தமட்டில் நாம் யார் என்று முதலில் அறிந்து கொண்டால் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்ய முடியும் . அதனால் தான் 21 வயதில் வெளிநாடு சென்ற நான் எனது தந்தை, தாத்தா பெயர் தெரியாத இடங்களில் படித்து பல்கலைக்கழக பட்டம் பெற்று, நிறுவனங்களில் பணியாற்றி முதன்மை இயக்குனர், மேலாண்மை இயக்குனர், மூத்த மேலாண்மை இயக்குனர் என்ற படிநிலைகளில் உயர்வு பெற்று நான் யார் என தெரிந்து கொண்ட பிறகு அடுத்தவர்களுக்கு என்ன செய்ய முடியும் என தெரிந்து கொண்ட பிறகு அரசியலுக்கு வந்தேன்" எனவும் தனது உரையின் நடுவில் குறிப்பிட்டுள்ளார்.

என்னதான் வழக்கங்கள் மாறினாலும் இவர் பரம்பரை புகழ்பாடும் வழக்கம் மாறாது போலிருக்கிறது.


Source - ASIANET NEWS

Similar News