ராகுலின் முட்டாள்தனம் - யாத்திரையை பற்றி புட்டு புட்டு வைக்கும் குஷ்பூ

ராகுல் சுற்றுப்பயண திட்டம் முட்டாள்தனமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்' என குஷ்பூ காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

Update: 2022-09-17 11:30 GMT

ராகுல் சுற்றுப்பயண திட்டம் முட்டாள்தனமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்' என குஷ்பூ காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.


அம்பேதகருடன் மோடி ஒரு ஒப்பீடு என்ற புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாரதி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது ராகுலின் பாதயாத்திரை குறித்து பதில் அளித்த அவர், 'காங்கிரஸில் இருக்கும் முக்கியமான தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். யார் ராகுலுடன் செல்கிறார்கள் என போகும்போது பார்த்தால், அவர் யாருடன் உட்கார்ந்து பேசுகிறார் என்பதை பார்த்தால், பாதயாத்திரைக்கான மேப்பை எடுத்து பார்த்தால் தெரியும். சுற்றுப்பயணம் திட்ட முட்டாள் தனமாக இருப்பதாக அவர் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்'


ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை எடுத்துவிட்டால் காங்கிரசை பொருத்தவரை அவர் வயநாடு தொகுதி எம்.பி மட்டும்தான் காங்கிரஸ் கட்சி எல்லாவற்றையும் இழந்து விட்டது வளர வாய்ப்பு இல்லை. ஜனநாயகப்படி நமக்கு நல்ல எதிர்க்கட்சி வேண்டும் ஆனால் காங்கிரஸ் ராகுல் காந்தி இருக்கும் வரை வளராது' கூறினார்.


Source - Maalai malar

Similar News