கொடிகள் அகற்றம், மேடை போட வந்த லாரி சிறைபிடிப்பு! அன்னூர் பா.ஜ.க போராட்டத்திற்கு தி.மு.க அரசு கொடுத்த குடைச்சல் - அண்ணாமலைக்கு கூடும் கூட்டம் ஏற்படுத்திய பயமா?

தமிழக பா.ஜ.க நேற்று அன்னூரில் நடத்திய போராட்டத்திற்கு தி.மு.க அரசு கட்சி கொடிகளை அகற்றி, அனுமதியை சிக்கலாக்கி போராட்டத்தை நடத்தவிடாமல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-12-08 02:45 GMT

தமிழக பா.ஜ.க நேற்று அன்னூரில் நடத்திய போராட்டத்திற்கு தி.மு.க அரசு கட்சி கொடிகளை அகற்றி, அனுமதியை சிக்கலாக்கி போராட்டத்தை நடத்தவிடாமல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டம் அன்னூரில் நேற்று நடந்தது. இதற்காக அன்னூரில், கோவை ரோட்டில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு காரம்பாளையம், கணேசபுரம் மற்றும் குன்றத்தூரில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு போலீசார் கோடிகளை அகற்றும் படி கூறியுள்ளார்கள்.

பா.ஜ.க நிர்வாகிகள் கொடிகளை அகற்ற மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர், அதனை தொடர்ந்து நேற்று அதிகாலையில் போலீசார் அன்னூரில் கட்டப்பட்டிருந்த 500 பா.ஜ.க கொடிகளை அகற்றியுள்ளனர். மேடை அமைக்க உபகரணங்களுடன் வந்த லாரியையும் அந்த ஊழியர்களையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

இது குறித்து பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள தகவலில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு முறையாக காவல்துறையிடம் விண்ணப்பித்த அனுமதி பெறப்பட்டது, வேண்டுமென்றே பல இடையூறுகளை ஏற்படுத்தி நடப்பட்ட கொடிகளை 500 கொடிகளை போலீசார் காலையில் அகற்றி உள்ளனர். மேடை அமைக்கவும் அனுமதி தர மறுத்துவிட்டனர் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ.க அனைத்தையும் சாதனை படைக்கும்' என கூறினார்.

அண்ணாமலைக்கு கூடும் கூட்டம் மேலும் அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை எப்படியாவது தி.மு.க அரசு குறைத்து விட வேண்டும், அதனை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source - Dinamalar

Similar News