சிறப்பான ஆட்சியால் மக்களிடத்தில் நற்பெயர் எடுத்துள்ளார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டும் நடிகை ரோஜா.!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்வதாகவும், மக்களிடத்தில் நற்பெயர் பெற்றுள்ளதாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா பாராட்டி பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்வதாகவும், மக்களிடத்தில் நற்பெயர் பெற்றுள்ளதாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா பாராட்டி பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுருட்டப்பள்ளியில் உள்ள அருள்மிகு சர்வமங்களா சமேத பள்ளி கொண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு நடைபெற்ற மகாசிவராத்திரி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்தும் கேட்டறிந்தனர். ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் தற்போது பிசியாக இருப்பதால் தமிழக அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு வரைக்கும் எடப்பாடி பழனிசாமியை யார் என்று தெரியாது. ஆனால் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மேலும் மக்களிடையே நற்பெயரையும் எடுத்துள்ளார் என கூறினார்.