'தனித்தமிழ்நாடு கேட்கும் தேசவிரோதி, தீயசக்தி திருமாவளவனை குண்டாஸ்ல உள்ள தூக்கி வைக்கணும்' - ஹெச்.ராஜா ஆவேசம்
'தனி தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
'தனி தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
'தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதை தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்' என திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவனின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் தனி தமிழ்நாட்டை வெட்டி எடுப்பதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என பேசி உள்ள தேசவிரோதி, தீயசக்தி திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திருமாவளவன் மீது புகார் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடரும் எனவும் ஹெச்.ராஜா கூறியது குறிப்பிடத்தக்கது.