நியாயத்தின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி ! எஸ்.பி.வேலுமணி ட்விட் !
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அலுவலகம், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், மற்றும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Sp Velumani Twit
Image Courtesy: Admk Twiter