மத்திய பட்ஜெட்டை லாலி பாப் என்று சொன்ன ஸ்டாலின் முதிர்ச்சியற்றவர்.. அமைச்சர் ஜெயகுமார் விளாசல்.!

மத்திய பட்ஜெட்டை லாலி பாப் என்று சொன்ன ஸ்டாலின் முதிர்ச்சியற்றவர்.. அமைச்சர் ஜெயகுமார் விளாசல்.!

Update: 2021-02-02 17:38 GMT

மத்திய பட்ஜெட்டை நேற்று (1ம் தேதி) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை லாலி பாப் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் அமைச்சர் ஜெயகுமார் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார்: மத்திய பட்ஜெட்டை லாலி பாப் என ஒப்பிட்டு மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்வது அரசியல் முதிர்ச்சி இல்லாததை காட்டுகிறது என்றார்.

Similar News