முதலமைச்சர் பதவி மேல் கோரப்பசியில் ஸ்டாலின் உள்ளார்.. சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்.!

முதலமைச்சர் பதவி மேல் கோரப்பசியில் ஸ்டாலின் உள்ளார்.. சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்.!

Update: 2021-02-22 16:06 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் செல்லியம்பாளையத்தில், அதிமுக மகளர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றியதாவது: பெருந்திரளாகக் கூடியிருக்கும் மகளிர் அணி முயற்சி செய்தால், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படும் என்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராகும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தலைவாசல் இனி தாலுகாவாக செயல்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மேலும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்தபடி உள்ளார். அவர் என்ன மந்திரவாதியா? என்று ஸ்டாலின் கேட்டுள்ளதற்கு அவர் பேசியதாவது: தான் மந்திரவாதி இல்லை. சொல்வதை செய்யும் செயல்வாதி என கூறினார்.

10 ஆண்டு ஆட்சியில் இல்லாததால் முதலமைச்சர் பதவிக்கான கோரப்பசியில் ஸ்டாலின் உள்ளார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவின் தில்லுமுல்லுகளை முறிடித்து மீண்டும் தேர்தல் வெற்றியை உறுதி செய்யுங்கள் என பேசினார்.
 

Similar News