நாளை அமித்ஷாவை சந்திக்கும் ஸ்டாலின் - பின்னணி என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்திக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Update: 2022-09-02 13:33 GMT

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்திக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களின் சட்ட ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதார, மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நாளை நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் அப்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் போதை பொருள் நடமாட்டம் தொடர்பாக விவரங்களை தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Asianet News

Similar News