கடந்த வாரம் வேல் தூக்கிய ஸ்டாலின் நேற்றைய தைப்பூசத்தை மறந்தார் - வேல் தூக்கியது நடிப்பா?

கடந்த வாரம் வேல் தூக்கிய ஸ்டாலின் நேற்றைய தைப்பூசத்தை மறந்தார் - வேல் தூக்கியது நடிப்பா?

Update: 2021-01-29 07:22 GMT

கடந்த வாரம் திருத்தணியில் வேல் தூக்கி பிரச்சாரம் செய்துவிட்டு விமர்சனங்கள் எழுந்தவுடன் 'தைப்பூசத்திற்கு' அமைதியாகிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

கடந்த சில நாட்களாக தி.மு.க தரப்பில் அதன் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முக்கிய அம்சமாக 'தி.மு.க இந்துக்களின் எதிரி' என்ற எண்ணத்தை மக்களிடம் மாற்றி எப்படியாவது வாக்குகளை  வாங்கி பதவியில் அமர வேண்டும் என துடித்து இந்துக்களின் வாக்குகளை பெற தொடர்ச்சியாக நாடகமாடி வருகின்றனர்.

அதன் வெளிப்பாடாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த தி.மு.க விழாவில் ஸ்டாலின் "என் மனைவி போகாத கோவில்களே கிடையாது" என பெருமையாக கூறினார். பின் விராலிமலையில் நடந்ந கூட்டத்தில் "தி.மு.க தலைவர் கருணாநிதிதான் 22 அண்டுகள் ஓடாமல் இருந்த விராலிமலை முருகன் கோவில் தேரை ஓடும் அளிவிற்கு முயற்சிகள் எடுத்தார்" என பிரச்சார கூட்டத்தில் பெருமையாக கூறி இந்துக்களை கவர பார்த்தார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் திருத்தணியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இந்துக்களின் முக்கிய கடவுளான முருகப்பெருமானின் வேல் ஆயுதத்தை கையில் ஏந்தி புன்சிரிப்புடன் புகைப்படத்திற்கு வடிவம் கொடுத்தார். இவர் விபூதி, குங்குமம் வைத்தாலே அழிப்பவர் என்பது மக்களுக்கே தெரியும். இப்படிப்பட்ட தொடர்ச்சியான செயல்களை இந்துமத வாக்குகளை கவர கச்சிதமாக செய்துவந்த ஸ்டாலின் நேற்றைய தைப்பூசத்தை மறந்தார். 

அதற்கு சில முக்கிய காரணஙகளும் கூறப்படுகிறது அறிவாலய வட்டாரங்களில். ஸ்டாலின் வேல் தூக்கி நின்றது கூட்டணி கட்சிகளுக்கும், திராவிடர் கழகம் போன்ற இந்து மத வெறுப்பு இயக்கங்களுக்கும் பிடிக்கவில்லை என்பதால் இந்தப்பக்கம் இந்துக்கள் வாக்குகளா அல்லது அந்தப்பக்கம் திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவா என குழம்பி நிற்பதாக சில சீனியர் உடன்பிறப்புகள் வெளிப்படையாக கூறுகின்றனர்.

Similar News