நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: கரு.நாகராஜன் குற்றச்சாட்டு.!
நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா மத்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து வருவதாக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா மத்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து வருவதாக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது, சட்ட ரீதியான போராட்டம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வுக்கு எதிராக அமைக்கப்பட்ட குழுவால் எந்த ஒரு பயனும் இல்லை எனவும், அதனால்தான் வழக்கு தொடரப்பட்டதாக கூறினார்.
மேலும், இது கொள்கை ரீதியான போராட்டம் அல்ல என்றும், சட்ட ரீதியான போராட்டம் என்றும் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.