"ஒரு கோடிப்பே" - சூர்யா'வின் 'ஜெய்பீம்' இருளர் இன நன்கொடை பித்தலாட்டம்! வெளிவந்த உண்மைகள் !

Update: 2021-11-09 07:30 GMT

பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடியை நடிகர் சூர்யா வழங்கியதில் உள்ள பித்தலாட்டம் அம்மலமாகியுள்ளது.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்' ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்ற இப்படத்தின் வெளியீட்டின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சூர்யா மற்றும் ஜோதிகாக வழங்கிய விவகாரத்தில் உள்ள திராவிடத்தனம் அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது படம் வெளியான இரண்டு தினங்களுக்கு முன் முதல்வரை சந்தித்த படக்குழு இந்தப் படத்தை அவருக்காக பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினர். அதனை கண்டு மகிழ்ந்ததாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகவும் படத்திற்கு நன்கு விளம்பரம் செய்தார். மேலும் படக்குழுவினருக்கு அவரது பாராட்டுக்களை தெரிவித்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார்.

இந்த காசோலையை பற்றி தற்பொழுது உண்மைகள் அம்பலமாகியுள்ளன, அதாவது அந்த ரூ.1 கோடி பணம் சூர்யாவின் சம்பள பணத்திலோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணத்திலோ கொடுக்கவில்லை எனவும், சூர்யாவின் அறக்கட்டளை 'அகரம்' அறக்கட்டளை'க்கு மக்கள் நன்கொடை அளித்த பணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. அதாவது பொதுமக்கள் சூர்யாவை நம்பி அறித்த நன்கொடையை 'ஜெய்பீம்' பட ப்ரோமோஷனுக்காக பயன்படுத்திகொண்டார்.

அதுமட்டுமல்லாமல், காசோலையில் இருக்கும் 'PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST' என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை எனவும். இது புதிதாக தொடங்கபட்டதா? இன்னும் பதிவு செய்யபடவில்லையா? அதன் நிர்வாகிகள் யார் யார்? என விவரமும் ஏதுவும் அதிகாரப்பூர்வமாக இல்லை எனவும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இப்படி 1 கோடி குடுத்ததாக பொய் விளம்பரம் செய்து தன் படத்தை விளம்பரப்படுத்த இடதுசாரி நடிகர் சூர்யா முயற்சித்துள்ளார். இந்த நாடகம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News