மதுரை: பேக்கரியை உடைத்த தி.மு.க. பிரமுகர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்.!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் பேக்கரியை, பேரூர் திமுக செயலாளர் பிரகாசம் உடைத்து நாசம் செய்தார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் பேக்கரியை, பேரூர் திமுக செயலாளர் பிரகாசம் உடைத்து நாசம் செய்தார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் பேக்கரி ஒன்றை நடத்தி வந்தார். முழு ஊரடங்கு காரணமாக பேக்கரி மூடப்பட்டிருந்தது. இதனிடையே, கையில் பயங்கர ஆயுதங்களுடன் அதிமுக பிரமுகர் பேக்கரியில் நுழைந்த திமுக மாணவரணி துணைச்செயலாளர் அசோகக், தனது ஆதரவாளர்களுடன் பேக்கரி முன்பாக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி, மற்றும் நாற்காலிகள், மேஜை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தினர்.
மேலும், பேக்கரி முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அசோக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வைரலாக்கினர். இதனிடையே பேக்கரி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அசோக், அறிவழகன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவு பெற்று பல்வேறு குற்றச்செயல்களில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவது, பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி அடாவடியில் ஈடுபடுவது சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் போலீசாருக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலையே தமிழகத்தில் நிலவி வருகிறது.