'வெள்ளைக்காரன் போன பிறகும் திராவிட இனம்'ன்னு பேசுறதே தப்பு - கொளுத்தி போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
'திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு' என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
'திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு' என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பழங்குடியின பெருமை தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தற்போது வைரலாகி வருகிறது. 'திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டதே தவறு, விந்திய மலைக்கு தெற்கு இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதை பண்டைய வரலாறு வடபகுதியில் இருப்பவர்களுக்கு செல்வது நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என பின்பற்றி வருவது தவறு, பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இருவிதமான இடஒதுக்கீட்டை ஒதுக்கீட்டை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பழங்குடியினர் 8 லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு மாநில அரசு 1 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் வழங்கி வருகிறது. இது குறைவாகவே உள்ளது இதனை கருத்தில் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.