கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் ! பக்தர்கள், ஆன்மீக அன்பர்களுக்கு அழைப்பு விடுத்த இந்து முன்னணி ! விழிப்படைவார்களா தமிழக இந்துக்கள் !
கோயில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை இந்து முன்னணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மத உணர்வாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
கோயில் நகைகளை உருக்கும் இந்து விரோத தி.மு.க அரசை கண்டித்து, நாளை ( அக்டோபர் 26 - செவ்வாய் ) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்துமுன்னணி அறிவித்திருந்த நிலையில் " பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்" என தமிழக இந்துக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
அக்டோபர் 26 - செவ்வாய் கோவில் நகைகளை உருக்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்...
பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள இந்துமுன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.
என கூறப்பட்டுள்ளது.
நாளை நடக்கும் ஆர்ப்பாட்டம், இந்து சமய அறநிலைய துறையின் செயல்பாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பாக்கலாம்.