இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி - தமிழிசை பெருமிதம் !

twitter-grey
Update: 2021-10-22 02:45 GMT
இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி - தமிழிசை பெருமிதம் !

"நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி" என பெருமை பொங்க பாராட்டியுள்ளார் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம், "கொரோனா என்ற வேதனையை 100 கோடி தடுப்பூசிகள் வென்ற சாதனையை நாள் இது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி முடியும் என்று நிரூபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த பெரும் சாதனையைப் படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.


 - Source - Asianet NEWS

Tags:    

Similar News