தமிழக பட்ஜெட் எப்போது ? சட்டப்பேரவை செயலர் புதிய தகவல் !

ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் பட்ஜெட் மிக முக்கியமானதாகும். எனவே திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்கு பின்னர் தற்போதுதான் பட்ஜெட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-08-04 09:15 GMT

தமிழக சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கும் என்றும் சட்டப்பேரவைச் செயலர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பட்ஜெட் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர்.

ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் பட்ஜெட் மிக முக்கியமானதாகும். எனவே திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்கு பின்னர் தற்போதுதான் பட்ஜெட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையின் கூட்டத்தை ஆகஸ்ட் 13ம் நாள் காலை 10 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு 2021, 2021 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Polimer

Image Courtesy:Samayam

https://www.polimernews.com/dnews/152039/ஆகஸ்ட்-13ந்-தேதி-தமிழகசட்டப்பேரவையில்-பட்ஜெட்தாக்கல்-செய்கிறார்-நிதிஅமைச்சர்-பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன்

Tags:    

Similar News