தமிழகத்தில் ஏப்ரல் 3ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்.!

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வருகின்ற 3ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார்.

Update: 2021-03-31 14:24 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பிரதமர் மோடி நேற்று (30ம் தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் பரப்புரை மேற்கொண்டார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டனர்.


 



இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வருகின்ற 3ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 1ம் தேதி அன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்யும் அவர், 2ம் தேதி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அதனை முடித்துக்கொண்டு 3ம் தேதி அன்று சிறப்பு விமானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். அன்றைய தினம் நெல்லை, ராமநாதபுரம், மற்றும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Similar News