தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது.

Update: 2021-03-19 06:16 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் இந்த முறை 5 முனை போட்டி நிலவி வருகிறது. இதில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகதான் களத்தில் உள்ளது.




 


இதனிடையே கடந்த 15ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தார். அதே போன்று பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்களும் தொடர்ந்து தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.




 


இந்நிலையில், இன்று வேட்புமனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். இன்று மாலை 4 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இன்று மாலை எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தெரிவரும்.

Similar News