நகர்ப்புற உள்ளாட்சி நிலவரம்: பா.ஜ.க. எத்தனை இடங்கள் பிடித்துள்ளது தெரியுமா!

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

Update: 2022-02-22 07:03 GMT

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கிருஷ்ணகரி உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே போன்று சென்னையில் பல வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். விரைவில் அதற்கான முடிவுகள் தெரியவரும்.

அதே போன்று மாநகராட்சி 1, நகராட்சியில் 16, பேரூராட்சிகளில் 50 இடங்களை பாஜக பிடித்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரும். மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் பல வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News