கஞ்சா போதையில் இருந்த மாணவனின் பெற்றோரை வரச்சொன்ன போலீசார் - அவமானத்தில் மாணவன் தற்கொலை

கஞ்சா போதையில் ரகளை செய்த மாணவர்களை போலீசார் எச்சரித்ததால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-22 13:20 GMT

கஞ்சா போதையில் ரகளை செய்த மாணவர்களை போலீசார் எச்சரித்ததால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கஞ்சா போதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்ட போது போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்ததால் மனமுடைந்த நான்காம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனியை சேர்ந்த சதீஷ் என்கிற மாணவர் தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் சதீஷ் சக மாணவர்களுடன் ஏ.கே.சமுத்திரம் பகுதியில் கஞ்சா அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவர்களை பிடித்து எச்சரித்த போலீசார் தீபாவளிக்கு ஊருக்கு செல்லக்கூடாது எனவும் மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.



Source - Polimer News

Similar News