'கூல்' துரைமுருகனையே 'ஹாட்' துரைமுருகனாக்கிய மின்தடை - மின்தடை காரணமாக பாதியில் வெளியேறிய அமைச்சர்
அமைச்சருக்கு துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் விழாவில் மின்சார தடை ஏற்பட்டதால் கடுப்பாகி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருக்கு துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் விழாவில் மின்சார தடை ஏற்பட்டதால் கடுப்பாகி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு வருகிறது, இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
அப்பொழுது அமைச்சர் துரைமுருகன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால் சிறிது நேரம் முன்னாடி இருந்த மைக்கை வெறித்து பார்த்தபடி இருந்தார் அமைச்சர் துரைமுருகன்.
பின்னர் சிறிது நேரம் அங்கு இருந்த சேரில் அமர்ந்தவர் மின்சாரம் வராத காரணத்தினால் கடுப்பாகி பாதியிலேயே விழாவை முடித்துக் கொண்டு கிளம்பினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.