'சட்டமன்றத்துல முதல்வரை விட உதயநிதிக்கு தான் மரியாதையை கொடுக்கிறார்கள்' - தி,மு.க நாடகத்தை அம்பலப்படுத்திய வானதி சீனிவாசன்
'முதல்வருக்கு வணக்கம் வைப்பதற்கு முன் பலரும் உதயநிதிக்குதான் வணக்கம் வைக்கிறாங்க' என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
'முதல்வருக்கு வணக்கம் வைப்பதற்கு முன் பலரும் உதயநிதிக்குதான் வணக்கம் வைக்கிறாங்க' என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை ராமலிங்க சாலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது, இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ'வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசி அவர் கூறியதாவது, 'கழிப்பறை கட்டித் தருகிறேன் சுத்தம் செய்கிறேன் என கமலஹாசன் கூறியுள்ளார் நான் எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது என பட்டியல் தருகிறேன் அவர் உதயநிதியிடம் மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கிறார் எனவே அவரிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இதுபோன்ற டைம் பாஸுக்காக வந்து நடித்துக் கொண்டிருக்கிறார் கமல்' என்றார்.
'அமைச்சர்களை தாண்டி பவராக இருப்பவர் உதயநிதி தான் நான் சட்டமன்றத்தில் நேரில் பார்க்கிறேன் பலரும் முதல்வருக்கு வணக்கம் வைப்பதை விட அவருக்கு தான் முதலில் வணக்கம் வைக்கிறார்கள்' என்றார்.