திருமாவளவனுக்கு தோல்வி பயம் அதான் பிராமண இந்து, சூத்திர இந்து என உளறுகிறார் - போட்டுத்தாக்கும் கிருஷ்ணசாமி

நீட் அஸ்திரம் எடுபடாத காரணத்தினால் சூத்திரன் என்றும் பிராமணர் என்றும் அஸ்திரத்தை உபயோகிக்கிறார் திருமாவளவன் என கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

Update: 2022-10-12 09:19 GMT

நீட் அஸ்திரம் எடுபடாத காரணத்தினால் சூத்திரன் என்றும் பிராமணர் என்றும் அஸ்திரத்தை உபயோகிக்கிறார் திருமாவளவன் என கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்துதான் சூத்திரன் என்று பிராமணன் என்ற அஸ்திரம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதை குறிப்பிட்டு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது, 'சினிமாக்காரர்களால் தான் இளைஞர் சமுதாயம் சீரழிக்கப்படுகிறது. இப்போது ராஜராஜசோழன் இந்து இல்லை என்று சொல்கின்ற இயக்குனர் தான் கொம்பன் படத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அது கருத்து சுதந்திரம் என்றார். திரைத்துறையில் காசு போட்டமா பணத்தை சம்பாதித்தமாக என இருக்க வேண்டும். வரலாற்றை வரலாற்றை பார்ப்பது விட்டு மனம் போன போக்கில் திரித்து பேசி வரலாற்றை அழிக்கக்கூடாது.

அப்போது சாதி கொடுமையினால் தான் மதமாற்றம் நடந்ததாக கூறுகிறீர்கள். இம்மானுவேல் சேகரனார் கிறிஸ்தவத்தை ஏற்றதற்கு சாதி காரணம் இல்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அதெல்லாம் சும்மா நம் நாட்டில் வாள் மூலம்தான் மதமாற்றம் நடந்தது பாபர் காலத்தில் மதம் மாறாதவருக்கு புதிய வரியே போடப்பட்டது என்றார்.

அதேபோல் சூத்திர இந்து வேறு பிராமண வெகு என திருமாவளவன் கூறி வருகிறார் என எழுப்பப்பட்ட கேள்விக்கு அது ஒன்றும் இல்லை 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க'வை குறிவைத்துதான் நீட் தேர்வு பிரச்சினையை கையில் எடுக்கப்பட்டது அது எடுபடவில்லை இப்பொழுது அதனால் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து சூத்திரன் என்றும் பிராமணன் என்றும் அஸ்திரத்தை திருமாவளவன் கையில் எடுத்துள்ளார்' எனது விமர்சித்தார்.


Source - Asianet News

Similar News