திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தீவிர பிரசாரம்.!

அதிமுகவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

Update: 2021-03-25 03:27 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதிமுகவில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுகவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.




 


இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளராக வி.வி. ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதே போன்று நேற்று இரவு திருநகர் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வட்டச் செயலாளர் திருநகர் பாலமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News