பதவியை வைத்து திருப்பூர் தி.மு.க மேயர் செய்யும் சொத்து அபகரிப்பு முயற்சி!
திருப்பூர் தி.மு.க மேயர் தற்போது சொத்து அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொது அறிவிப்பு.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் அமைந்துள்ள பாப்பினி கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி என்பவரின் மகன் பால்சாமி மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி என்பவருக்கும் சொந்தமான கிரைய முடிக்கப்பட்ட சொத்து பிரச்சனை தான் இது. இவர்கள் தங்களுடைய வக்கீல் சார்பாக ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் 2019 ஆம் ஆண்டு 22 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் திருப்பூர் மாவட்டம் புதூர் மெயின் ரோடு அருகில் KNP சுப்பிரமணியன் காலனி பகுதியில் வசிக்கும் லேட். நஞ்சப்பன் என்பவரின் மனைவி பார்வதி ஆகியோரின் மகன் N. தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி ரேகா ஆகியோரின் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளது.
எனவே பார்வதி என்பவரிடமிருந்து பொது அதிகார பத்திரம் எழுதப்பட்டு, லேட் நஞ்சப்பன் என்பவரின் மகன் என். தினேஷ் குமார் என்பவர் சார்பில் சொந்தமான இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டது. அப்பொழுது இவர் தி.மு.கவில் ஒரு அங்கம் வகித்தார். கிரைய பத்திரம் எல்லாம் முடிக்க பெற்று அதற்கான பணத்தொகை முழுவதும் செலுத்தி விட்டதாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து விவரங்கள் பதியப்பட்டுள்ளன. தற்பொழுது இவர் தி.மு.க மேயராக இருந்து வருகிறார்.
திருப்பூர் தி.மு.க மேயராக இருக்கும் இவர் விற்ற தன் சொத்துக்களை மீண்டும் அபகரித்து அவற்றை விற்பதற்கு முயற்சிகளை செய்துள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட சொத்துதாரர்கள் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். மேலும் சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய சொற்றை மற்றொரு நபருக்கு விற்பதற்காக கிரைய பத்திரம் எழுதப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. உண்மைக்கு புறம்பாக இதனை செயலில் ஈடுபடுவோர் நடவடிக்கை செல்லாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Twitter source