அன்று தாத்தா..! இன்று பேரன்...! இந்து சமயத்தை சீண்டி தேவையில்லாமல் ஆப்பை எடுத்து சொருகிக்கொள்ளும் வரலாறு...!
அன்று தாத்தா....! இன்று பேரன்...! தேவை இல்லாமல் வினையை தேடிக்கொண்டனர்,
அன்று, 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையேற்று உரையாற்றினார் அந்த உரையில் திமுகவை அழிக்க நினைக்கும் சில குள்ள நரிகள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனின் பெயர் ராமர் அவன் கட்டிய பாலம் ராமர் பாலம் அதனால் அதில் யாரும் கை வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்... அந்த ராமன் எந்த பொறியியல் கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து இந்த பாலத்தை கட்டினான் அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியது பாஜகவிற்கும் திமுகவிற்கும் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராமரை பற்றி இழிவாக பேசிவிட்டார் என்று கருணாநிதிக்கு எதிராக பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் விஸ்வ இந்து பரிஷ் மூத்த தலைவரும் பிஜேபியின் முன்னாள் எம்பியுமாக இருந்த ராம் விலாஸ் வேதாந்தி, ராமரை பற்றி இழிவாக பேசிய கருணாநிதியின் தலை மற்றும் நாக்கை துண்டித்துக் கொண்டு வருவதற்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேலும் தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி ஒருபோதும் தமிழ்நாட்டை விட்டு போகாது எனவும் கூறியிருந்தார். தற்போது இதே நிகழ்வு கருணாநிதியின் பேரனாக உள்ள உதயநிதிக்கு நடந்துள்ளது.
அதாவது இன்று 2023 ஆண்டின் கடந்த வாரத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்ததோடு அதனை ஒட்டு மொத்தமாக அழிக்க வேண்டும் என்று கொடிய நோய்களுடன் அதனை ஒப்பிட்டு பேசியது கண்டிக்க தகுந்தது என்ற எதிர்ப்புகள் வெடித்து வருகிறது. அதாவது மக்களிடையே சனாதனத்தை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்து அவர்களை தூண்டிவிடும் வகையில் உதயநிதி பேசியுள்ளார் என்ற எதிர்ப்பும் இந்து மக்களின் மனதை துன்புறுத்தும் வகையில் பேசியுள்ளார், இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை காண்பித்து பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற விமர்சனங்களும் உதயதியை தற்போது பின் தொடர்ந்து வருகிறது.