மத்திய அமைச்சர் ஆகிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!

பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்ற பின்னர் மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது முதன் முறையாக அமைச்சரவை மாற்றப்படுகிறது. இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.

Update: 2021-07-07 11:30 GMT

பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்ற பின்னர் மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது முதன் முறையாக அமைச்சரவை மாற்றப்படுகிறது. இன்று மாலை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.

மத்திய அமைச்சர்களாக 43 பேர் இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்.பி.க்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை புரிந்தனர். இதனை தொடர்ந்து 43 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியானது. அந்த பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம் பெற்றுள்ளது.


மேலும், ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால், ஹர்தீப் சிங் புரி, வீரேந்திர குமார், ஆர்.பி. சிங், கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அஜய் பட், அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராசும் மத்திய அமைச்சர் ஆகிறார்கள்.

Similar News