கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த 'டூல்கிட்' உருவாக்கியது திஷா ரவி தான்! டெல்லி போலீஸ் அதிரடி!

கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த 'டூல்கிட்' உருவாக்கியது திஷா ரவி தான்! டெல்லி போலீஸ் அதிரடி!

Update: 2021-02-15 07:43 GMT

ஸ்வீடனை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்,  விவசாய போராட்டங்களை சர்வதேச அளவில் திட்டமிட்டு ஒருங்கிணைப்பது குறித்து ட்விட்டரில் தெரியாமல் பகிர்ந்து கொண்ட “டூல்கிட்” தொடர்பாக பெங்களூருவில் இருந்து 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


திஷா ரவி என அடையாளம் காணப்பட்ட இந்த ஆர்வலர் டெல்லி காவல்துறையின் சைபர் செல் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர் ஐந்து நாட்கள் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவின் காவலுக்கு நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ளார். பிப்ரவரி 4 ம் தேதி, சைபர் செல் "இந்திய அரசுக்கு எதிராக சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார யுத்தத்தை" நடத்துவதற்காக "டூல்கிட்" உருவாக்கிய "காலிஸ்தான் சார்பு" ஆதரவாளர்களுக்கு  எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது. "பொயட்டிக் ஜஸ்டிஸ் அறக்கட்டளை" என்ற பெயரில் காலிஸ்தான் சார்பு குழு தான் இந்த "டூல்கிட்" உருவாக்கியவர் என்று காவல்துறை கூறியிருந்தது.


கிரிமினல் சதி, தேசத் துரோகம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் குற்றச்சாட்டில் பெயரிடப்படாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


டெல்லி காவல்துறையினர், கூகிள் மற்றும் சில சமூக ஊடக நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் ஐடி, URL  மற்றும் சில சமூக ஊடக கணக்குகள் பற்றிய தகவல்களையும், தன்பெர்க் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஆவணத்தை உருவாக்கியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.


பின்னர், நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக 1,178 கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு ட்விட்டரைக் கேட்டது.


திஷா ரவி தான்  கிரெட்டா தன்பெர்க்கை டூல்கிட் ஆவணத்தை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த கூகிள் ஆவணத்தின் ஆசிரியர் மற்றும் ஆவணத்தை உருவாக்குதல் மற்றும் பரப்புவதில் முக்கிய சதிகாரர் திஷா தான் என்றும் தெரிவித்துள்ளனர்.


டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர் வாட்ஸ்அப் குழுவை  தொடங்கியது மட்டுமல்லாமல், டூல்கிட் ஆவணத்தை உருவாக்க ஒத்துழைத்ததோடு மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தை வடிவமைக்க அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார்.


"இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்ப அவர் காலிஸ்தானி சார்பு அறக்கட்டளையுடன் ஒத்துழைத்தார். கிரெட்டா தன்பெர்க்குடன் ஆவணத்தை பகிர்ந்து கொண்டவர் திஷா ரவி தான்" என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


இதற்கிடையில், டெல்லி நீதிமன்றம் 21 வயது திஷா ரவியை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்தது.


இந்திய அரசுக்கு எதிரான ஒரு பெரிய சதித்திட்டத்தை விசாரிப்பதற்கும், காலிஸ்தான் இயக்கம் தொடர்பானதாகக் கூறப்படும் பங்கைக் கண்டறிவதற்கும் காவல்துறை விசாரணை தேவை என்ற காரணத்தினால் காவல்துறை ஏழு நாட்கள் காவலைக் கோரியது.


ஊடக அறிக்கையின்படி, திஷா ரவி நீதிமன்ற அறைக்குள் அழுது, இரண்டு வரிகளை மட்டுமே திருத்தியுள்ளதாகவும், விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க மட்டுமே விரும்பியதாகவும் நீதிபதியிடம் கூறினார்.


டெல்லி காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, "டூல்கிட்" வழக்கில் திஷா  முன்னணியில் உள்ளார்,   ஆரம்ப விசாரணையின் போது அவர் எடிட்டிங் குறித்து ஒப்புக்கொண்டார், "டூல்கிட்டில்" சில விஷயங்களைச் சேர்த்து அதை மேலும் பரப்பினார்.


பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ரவி, 'ஃப்ரைடேஸ் ஃபார் ஃபியூச்சர் இந்தியா' என்ற குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

Similar News