ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி !

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

Update: 2021-09-02 04:08 GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி, மற்றும் சீமான், சசிகலா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விஜயலட்சுமியின் உடல் இறுதிச்சடங்கு செய்வதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு நேற்று மாலை எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று விஜயலட்சுமி உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார்.

Source, Image Courtesy: TopStories

https://www.toptamilnews.com/dtv-dinakaran-pays-homage-to-vijayalakshmis-body-by-visiting-obs-house/

Tags:    

Similar News