கேஸ் விலையில் 100 ரூபாய் குறைக்க வழியை பார்த்து வருகிறோம் ! - மீண்டும் உதயநிதியின் வாக்குறுதி !
Breaking News.
"தி.மு.க அறிக்கையில் கூறிய கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும்''என உதயநிதி கூறியுள்ளார்.
தி.மு.க சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ''நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதும் போராடி இருக்கிறோம், இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடுகிறோம். எங்கள் போராட்டம் மக்களுக்கானது" என்றார்.
மேலும் பேசிய அவர், "தி.மு.க அறிக்கையில் கூறிய கேஸ் விலையில் இருந்து 100 ரூபாய் குறைப்பதற்கான வழியையும் விரைவில் தமிழக அரசு செயல்படுத்தும்'' என்று தெரிவித்தார்.