உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் மெகா பரப்புரையை தொடங்கும் பா.ஜ.க.!
உத்தரகாண்ட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து இன்று முதல் மெகா பரப்புரையை பாஜக தொடங்க உள்ளது.
உத்தரகாண்ட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து இன்று முதல் மெகா பரப்புரையை பாஜக தொடங்க உள்ளது. இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி நேரடி மற்றும் காணொலி வாயிலான பரப்புரை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் எங்கள் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். அது மட்டுமின்றி பேரணிகளிலும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 இடங்களில் பிரமாண்டமான முறையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மத்திய அமைச்சர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மூத்த நிர்வாகிகளின் பேச்சுகளை பொதுமக்கள் கேட்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, நிதின் கட்கரி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai