உத்தரகண்ட்டில் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்களுக்கும் மேல் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

Update: 2022-03-10 04:49 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 36 இடங்களுக்கும் மேல் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்ப முதலே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கும் கூடதலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 18, மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. எனவே பாஜக ஆட்சி அமைப்பதில் சந்தேகம் இல்லை. மதியத்திற்குள் முழுமையான முடிவுகள் தெரிந்துவிடும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News