வி.சி.கவுக்கு 6 தொகுதியா? சிறுத்தை குட்டிகள் போராட்டத்தால் பதறிபோன திருமா.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று திருமாவளவன் காத்துக்கொண்டிருந்தார்.

Update: 2021-03-04 11:56 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று திருமாவளவன் காத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் திமுக ஒதுக்கியதோ வெறும் 6 தொகுதிதான். இதனால் 6 தொகுதியிலும் தனித்தனி சின்னத்தில்தான் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை கேள்விப்பட்ட சிறுத்தை குட்டிகள் சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது. இதனை அறிந்த திருமாவளவன் ஓடோடி சென்று இப்படி எல்லாம் பன்னாதீங்க தயவு செய்து போராட்டம் செய்யாதீங்க அமைதி காக்க சிறுத்தை குட்டிகளை கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் ஒரு வழியாக சிறுத்தை குட்டிகள் அனைவரும் சமாதானம் ஆனார்கள். இந்த போராட்டத்தால் அசோக்நகரில் பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News