கட்சியை பதிவு செய்யாதிங்க.. தேர்தல் ஆணையத்தை அணுகிய விஜய் தந்தை.. காரணம் இது தானாம்.!

கட்சியை பதிவு செய்யாதிங்க.. தேர்தல் ஆணையத்தை அணுகிய விஜய் தந்தை.. காரணம் இது தானாம்.!

Update: 2020-11-22 12:33 GMT

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் முடிவை நிறுத்தி வைத்துள்ளார் சினிமா தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.


எஸ்.ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது கட்சியை பதிவு செய்தார். இதற்கு நடிகர் விஜயிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது சொந்த வீட்டிலேயே கட்சிக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்றும் சந்திரசேகர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அதாவது, கட்சியில் தனது பெயரை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்த வேண்டாம் என விஜய் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக்கூடாது என நிர்வாகிகளிடம் கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.

இதனையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து பத்மநாபனும், பொருளாளர் பதவியில் இருந்து விஜயின் தாய் ஷோபாவும் ராஜினாமா செய்தனர். இவ்வாறு அடுத்தடுத்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு சிக்கல்கள் நீண்டுக்கொண்டே சென்றது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். விஜய் எதிர்ப்பு தெரிவித்ததாலும், தனது மனைவி ஷோபா ராஜினாமா செய்ததாலும் எஸ்.ஏ.சி இந்த முடிவை எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய நவம்பர் 5ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 நாளில் முற்றிலும் முடிவுக்கு வந்த கட்சி தமிழகத்தில் இதுதான் என்று தெரிகிறது.
 

Similar News