விநாயகர் இந்தி கடவுள், முருகன் தமிழ் கடவுள்'ன்னு ஏன் இப்படி பரப்புறீங்க? கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம் !

Breaking News.

Update: 2021-09-10 07:15 GMT

முருகன் தமிழ்கடவுள், வியாயகர் இந்தி கடவுளா? ஏன் இப்படி பரப்புகிறீர்கள்? என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அனைவருக்கும் இனிய சங்கத்தமிழ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், முருகனை தமிழ் கடவுள் எனவும் ,விநாயகரை இந்தி கடவுள் எனவும் கூறுகிறார்கள்.

ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் எப்படி வெவ்வேறு கடவுள்கள் ஆவார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Twitter

Tags:    

Similar News