'கழகத்தின் போர்வாளே' - உணர்ச்சிவசப்பட்டு திருச்சி சிவா பேசிக்கொண்டிருக்கும்போதே 'அடபோங்கப்பா' என எழுந்து சென்ற தி.மு.க நிர்வாகி!
தி.மு.க எம்பி திருச்சி சிவா உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் கூட்டத்தில் எழுந்து சென்ற தி.மு.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் திருச்சி சிவா கோபமடைந்தார்.
தி.மு.க எம்பி திருச்சி சிவா உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் கூட்டத்தில் எழுந்து சென்ற தி.மு.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் திருச்சி சிவா கோபமடைந்தார்.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் இன்று பல இடங்களில் கூட்டம் நடத்தப்பட்டன.
திருச்செந்தூரில் தி.மு.க இளைஞரணிக்கு திராவிட மாடல் பயிற்சி அளிக்கும் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்.பி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசியதாவது, 'உங்களை தயார்படுத்த வரவில்லை கூர்த்திட்ட வந்துள்ளோம். இந்த இயக்கத்தின் எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்க உள்ளோம். இந்த நாட்டை மொழியை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்கள் நீங்கள் இந்த இனத்தின் கோட்டை காவலர்களாக இருக்கப் போகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்' என உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது எழுந்து சென்ற ஒரு தொண்டரை அழைத்து திருச்சி சிவா நீங்கள் என்ன பொறுப்பில் உள்ளீர்கள் எங்கும் செல்லக்கூடாது ஒரு இடத்தில் அமருங்கள். ஒழுக்கம் வேண்டும் நாம் சினிமாவிற்கு சென்றால் அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் கடைசி வரை அமர்ந்து அந்த படத்தை முழுமையாக பார்க்கிறோம். ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் என்ன எல்லாருக்கும் வேலை இருக்கிறது நன்றாக யோசித்துப் பாருங்கள் எதற்கு நாம் இங்கு பேசிவிட்டு நான்கு மணி நேரம் பயணம் செய்து வேறு ஒரு இடத்துக்கு சென்று அங்கு பேசுகிறோம் இதெல்லாம் பொது வாழ்க்கை என பேசினார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.