மத்திய அரசை நாங்க எந்த காலத்திலும் எதிர்க்கவில்லை.. குப்புற விழுந்த தி.மு.க.!

கடந்த காலங்களில் திமுகவினர் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, கோ பேக் மோடி என்ற வாசகம் அடங்கிய பேனர்களை வைத்து விளையாடினார்கள். அது மட்டுமின்றி ட்விட்டர் மூலமாகவும் அதனை டிரெண்டிங் செய்து வந்தனர்.

Update: 2021-07-16 04:58 GMT

மத்திய அரசை எந்த காலத்திலும் திமுக எதிர்க்கவில்லை என்று அக்கட்சியை சேர்ந்த அமைப்பு செயலர் பாரதி கூறியுள்ளார். மேகதாது குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் டெல்லி சென்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளனர்.

இதனிடையே டெல்லி செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் திமுக அமைப்பு செயலர் பாரதி கூறியதாவது: மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


அதனை எடுத்துக்கொண்டு மத்திய, ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். நம்பிக்கையோடு செல்கிறோம், நம்பிக்கை 'கை' கொடுக்கும். மேலும், மத்திய அரசை எந்த காலத்திலும் திமுக எதிர்க்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கையை முன்வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கடந்த காலங்களில் திமுகவினர் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, கோ பேக் மோடி என்ற வாசகம் அடங்கிய பேனர்களை வைத்து விளையாடினார்கள். அது மட்டுமின்றி ட்விட்டர் மூலமாகவும் அதனை டிரெண்டிங் செய்து வந்தனர்.

இந்திய நாட்டில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எந்த பகுதிக்கு வேண்டும் என்றாலும் சென்று வரலாம். ஆனால் திமுகவினருக் மட்டும் தமிழகம் சொந்தம் என்பது போன்று கடந்த காலங்களில் நடந்துவிட்டு, தற்போது நாங்கள் மத்திய அரசை எதிர்க்கவில்லை என்று சொல்லவது நகைச்சுவைதான் ஏற்படுத்துகிறது.

Similar News