கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா.. துணை முதலமைச்சர் சாட்டையடி.!

கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா.. துணை முதலமைச்சர் சாட்டையடி.!

Update: 2021-02-03 09:47 GMT

கிராமசபைக் கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாட்டையடி கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலுக்காக மாவட்டம்தோறும் கட்சிக்காரர்களை வைத்து கிராச சபைக் கூட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். கிராம சபைக்கூட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் ஒரு கூட்டம் ஆகும். இதனை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் இதனை தெரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் ஊர் ஊராக போலி கிராம சபைக்கூட்டம் போட்டு வருகிறார். இந்த கூட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் எந்தவிதமான ஆதரவும் இல்லை என்றாலும் தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்.

இந்நிலையில், சென்னை, திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திமுக ஆட்சியில் அனைத்தும் கேடு தரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். ஆனால் அதனை தடுக்க தவறிவிட்டனர்.

மேலும் பேசிய அவர், கிராம சபைக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்தான் நடத்த வேண்டும். ஆனால் ஸ்டாலின் கிராம சபைக்கூட்டம் நடத்துகிறார். அவர் என்ன மகாத்மா காந்தியா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேச்சுக்கு கட்சியினரிடையே கை தட்டல், மற்றும் பலத்த விசில் சத்தம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News