மேற்கு வங்க அரசோடு மோதல் இருக்குமா - மேற்குவங்க புதிய ஆளுநர் ஆனந்த போஸ் பதில் என்ன?
மேற்குவங்க அரசுடன் மோதும் எண்ணம் இல்லை என மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க அரசுடன் மோதும் எண்ணம் இல்லை என மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசன் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த நிலையில் கேரளத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.வி.ஆனந்த போஸ் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். மேற்குவங்க ஆளுநராக அறிவிக்கப்பட்ட நிலையில் சி.வி.ஆனந்த போஸ் கூறுகையில், 'என் மீதுள்ள நம்பிக்கையில் இப்படி ஒரு பொறுப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரள மக்களுக்கு நன்றி, கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் அமைப்புக்குள் நின்று கொண்டு செயல்பட முயற்சி செய்வேன். மேற்குவங்க மக்களுக்கு பயன்படும் விஷயங்களை முன் நின்று நடத்த முயல்வேன்.
மேற்கு வங்கத்தில் மாநில அரசுடன் மோதும் எண்ணம் இல்லை என ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார்.