"உங்க மகனின் ஆட்சி இவ்வளவு கேவலமாக இருக்கே அய்யா" - கருணாநிதி படத்தின் முன்பு நின்று புலம்பும் மின்வாரிய ஊழியர்

என்ன உங்க மகனின் ஆட்சி இப்படி உள்ளது என மின்வாரிய ஊரியா ஒருவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படத்தின் முன்பு நின்று புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.

Update: 2022-09-27 07:34 GMT

என்ன உங்க மகனின் ஆட்சி இப்படி உள்ளது என மின்வாரிய ஊரியா ஒருவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படத்தின் முன்பு நின்று புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.



மின்வாரிய ஊழியர் ஒருவர் மறந்த தி.மு.க தலைவர் கருணாநிதி படத்தின் முன்பு நின்று புலம்புகிறார், அந்த புலம்பலின் போது, 'ஒரு சரண்டர் இல்லை, அரியர் இல்லை, எந்தவிதமான பண உதவியும் மானியமாக கிடைப்பதில்லை! என்ன உங்க மகனோட ஆட்சி இப்படி உள்ளது கேட்டால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பதவி ஏற்கிறார். நாங்கள் யாரிடம் போய் கேட்பது நீங்கள் இருக்கும் போது எந்த அரசு ஊழியராவது கண்ணீர் வடித்தார்களா?

அரசு ஊழியர்களுக்கு தான் நீங்கள் முதல் முக்கியத்துவம் கொடுத்து விடுவீர்கள், நீங்கள் கனவில் சென்று சரண்டர், டி ஆர் ஏ கொடுக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லி எங்கள் வாழ்க்கை வழிமுறையை தேடி கொடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் மீதுள்ள குறையயை கருணாநிதி பணத்தை முன்பு நின்று தமிழக மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ஊழியர் ஒருவர் புலம்பும் வீடியோ சமூக வலை தினங்களில் வைரல் ஆகி வருகிறது.


Source - Dinamalar

Similar News