அ.தி.மு.க. பா.ஜ.க. அதிகமான இடங்களை பெற்று சட்டமன்றத்தில் நுழையும்: சேலத்தில் மத்திய அமைச்சர் பேச்சு.!
அ.தி.மு.க. பா.ஜ.க. அதிகமான இடங்களை பெற்று சட்டமன்றத்தில் நுழையும்: சேலத்தில் மத்திய அமைச்சர் பேச்சு.!
மத்திய அரசு நடவடிக்கையால் அடுத்து வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்த்தி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் என்ற மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடையானது தமிழக சட்டப்பேரவை போன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி அதிகமான இடங்களை பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். இதுவரை ஜல்ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். அதே போன்று நாட்டில் அந்நிய முதலீடு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு மத்திய அரசு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாலை முழுவதும் காவி மயமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.