விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உப்பளம்: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூர் கோயில் நிலத்தை உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடரும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-01-06 06:49 GMT

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூர் கோயில் நிலத்தை உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடரும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், குளத்தூர் பகுதியில் குழந்தை விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 49.60 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதனை உப்பளமாக அரசு மாற்றியுள்ளது. எனவே மத வழிபாட்டுத் தலத்திற்கு சொந்தமான இடத்தை நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்ற முடியாது.

மேலும், உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக, கிராம ஊராட்சியும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் உப்பள உற்பத்தி செய்வதற்கான ஏல அறிவிப்பையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒரு விவசாய நிலத்தை வகையினை மாற்றம் செய்ய ஆட்சியர் மற்றும் நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி வாங்குவது அவசியம். ஆனால் எவ்வித அனுமதியும் பெறவில்லை. விதிகளையும் கடைப்பிடிக்கவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பிறப்பிக்க வேண்டும். மேலும், உப்பளத்திற்கான ஏல அறிவிப்பினையும் ரத்து செய்ய வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் டெண்டர் இறுதி முடிவு எடுப்பதற்கு அறநிலையத்துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது என அரசு தரப்பில் கூறியுள்ளது. நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தற்போது எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையே தொடர வேண்டும். மேலும், ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News