பக்தர்கள் இன்றி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Update: 2022-01-09 11:40 GMT

நெல்லையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழக திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலும் விளங்கி வருகிறது. இதனிடையே தைப்பூச திருவிழா 12 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.


இந்த விழாவில் திருநெல்வேலி பெயர் காரணம் பெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி மற்றும் தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இன்று கோயில் நடை திறக்கப்பட்டு திருவந்த கொடியேற்ற விழாவிற்கு பூஜையும், தொடர்ந்து கொடிப்பட்டம் கோயில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.

மேலும், கொடிமரத்திற்கு மஞ்சள், இளநீர் பால், தயிர், உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News