டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்யும் போலீசார்: டி.ஜி.பி.க்கு ரயில்வே புகார்!
ரயில் பயணத்தின்போது டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை மட்டும் காண்பித்து விட்டு போலீசார் பயணம் செய்வதாக தமிழக டிஜிபி, காவல்துறை ஆணையர், ரயில்வே கூடுதல் ஆணையருக்கு ரயில்வே நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை தெற்கு ரயில்வே வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதாவது தமிழக போலீசார் ரயில்களில் பயணம் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டைகளை காண்பித்து செல்கின்றனர். இது பற்றி பலமுறை புகார்கள் வருகிறது.
அது மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் போலீசார் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்த பயணிகளின் சீட்டுகளில் அமர்ந்து பயணிக்கின்றனர். அது போன்று பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர் பயணச்சீட்டுக்கான ஆவணங்களை கேட்டால் அதற்கு பதிலாக அடையாள அட்டையை மட்டும் காண்பிக்கின்றனர். இது போன்று தவறான முறையில் பயணம் செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Image Courtesy: The Financial Express