நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்காக ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்!

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது.

Update: 2021-12-28 02:39 GMT

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலுக்கு மிகவும் சிறப்பு சேர்பது கோயில் யானை காந்திமதியும்தான். தற்போது அந்த யானைக்காக பிரத்யேக முறையில் இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது.

அதாவது யானை காந்திமதி குளிப்பதற்கு எளிதாக இருக்கும்படி நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபம் அருகாமையில் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட நீச்சல் குளம் அமைக்கப்பட்டு வருகிறது. யானை எளிதில் நீச்சல் குளத்தில் இறங்குவதற்காக சாய்தள நடைபாதையும் அமைக்கப்டுகிறது. விரைவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News