லட்சுமிநரசிம்மர் கோயில் நிலத்தை அபகரிக்க முயலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்!

Update: 2022-04-22 15:45 GMT

விழுப்புரம் : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோடி ரூபாய் நிலத்தை தி.மு.க கவுன்சிலர் அபகரிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக, இந்து கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.


இந்நிலையில், திண்டிவனம் செஞ்சி சாலையில், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் அறக்கட்டளைக்குச்  சொந்தமான இலுப்பைத் தோப்பு இருந்து வந்துள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் தி.மு.க நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், சாலை அமைத்து நிலத்தை அபகரிக்க முயல்வதாக அ.தி.மு.க கிளைச் செயலாளர் ஐயப்பன் அறநிலையத் துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தார்.

இதனை அடுத்து சாலையை பார்வையிட்ட கோயில் செயல் அலுவல,ர் ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

"கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் திமுக கவுன்சிலர்" என்ற குற்றச்சாட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

News J

Tags:    

Similar News